புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-25T01:00:48+05:30)

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் சிப்காட் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சிப்காட் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேகேபள்ளி ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ஒரு டீ கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் அன்பழகன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தளியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக கடை உரிமையாளர் அப்துல் சாகேர் (52) என்பவரை தளி போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story