புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை பகுதியில் கே.டி.சி. நகரை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 56) மற்றும் அப்துல்அலி ஆகியோர் தங்களின் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story