புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
வேதாரண்யத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் மேல வீதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு, காரில் இருந்து புகையிலை பொருட்களை கொண்டு சென்றனர். அதை பார்த்த போலீசார் அந்த மளிகை கடையில் சோதனை செய்து, 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதையடுத்து வேதாரண்யம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் புகையிலை பொருட்கள் கொண்டுவந்த திருத்துரைப்பூண்டியை சேர்ந்த உமா பொடி(எ) அப்துல் காதர்(வயது70) என்பவரையும், மளிகைகடை உரிமையாளர் தாகீர்(எ) அபுதாகீர்(50) என்பவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருத்துரைப்பூண்டியை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.