புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது


புகையிலை பொருள் கடத்திய 2 பேர் கைது
x

சின்னசேலம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கார், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

வாகனசோதனை

சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பெத்தானூர்-ராயர்பாளையம் சாலையில் உள்ள ஊமச்சிஅம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மொபட்டில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது அவர் தடைசெய்யப்பட்ட 50 புகையிலை பாக்கெட்டுகள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் சின்னசேலத்தை அடுத்த அம்மையகரம் சமத்துவபுரம் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார்(வயது 30) என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை கச்சிராயப்பாளையம் அருகே மட்டிகைகுறிச்சி கிராமத்தில் உள்ள நபரிடம் இருந்து வாங்கி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

2 பேர் கைது

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மட்டிகைகுறிச்சி கிராமத்துக்கு விரைந்தனர். அங்கு தெற்கு தெருவை சேர்ந்த பாலகுரு மகன் முரளிசங்கர்(43) என்பவரின் வீட்டின் முன்பு நின்றிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 150 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார், முரளிசங்கர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொபட், கார், ரூ.8 ஆயிரம் ரொக்கம், 200 புகையிலை பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story