வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது


வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது
x

சாத்தனூர் அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்ட சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் ரவி, கோவிந்தராஜ், சிலம்பரசன், ராஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாத்தனூர் வனச்சரகம் பென்னையார் காப்புக்காடு பிக்கப் டேம் அருகில் உள்ள காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயன்ற போது ஒருவர் பிடிபட்டார்.

மற்றொருவர் நாட்டு துப்பாக்கியுடன் தப்பி சென்று தலைமறைவானார்.

பிடிபட்டவரை கைது செய்து வனத்துறை அலுவலகத்திற்குஅழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் அவர் தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 37) தெரியவந்தது.

மேலும் விசாரணையில் தப்பி சென்ற நபர் கொளமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (42) என்பது தெரியவந்தது.

பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தப்பி சென்றவரை பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரையும் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story