தியாகதுருகத்தில் வேலி கற்களை சேதப்படுத்திய 2 பேர் சிக்கினர்


தியாகதுருகத்தில் வேலி கற்களை சேதப்படுத்திய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 7:39 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் வேலிகற்களை சேதப்படுத்திய 2 பேர் சிக்கினர்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

தியாகதுருகம் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சங்கர் (வயது 43). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில் சங்கர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக கற்களை நட்டு வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள், பெரியசாமி மகன் செல்வம், முனுசாமி மகன் செல்வராஜ், இவரது மகன் குமரேசன் ஆகியோர் அந்த கற்களை உடைத்தும், கீழ தள்ளியும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் என கூறப்படுகிறது.

இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கலியபெருமாள் (60), செல்வராஜ் (55), ஆகியோரை கைது செய்தனர்.


Next Story