மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ே்மாட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி சிவாஜி நகர் 3-வது தெருவை சேர்ந்த நாகலிங்கம் மகன் மணிவண்ணன் (வயது 28). இவர், தேனியில் ஒரு டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ந்தேதி இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை நண்பர்களுடன் பிடித்து தேனி போலீஸ் நிலையத்தில் மணிவண்ணன் ஒப்படைத்தார். அதுகுறித்து அவர் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர்கள் ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியை சேர்ந்த மன்மதன் (20), ஆண்டிப்பட்டி சீனிவாசநகரை சேர்ந்த ஆகாஷ் (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்மதன், ஆகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story