போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் சிக்கினர்


போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

காந்திமாநகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் சிக்கினர்

கோயம்புத்தூர்

காந்திமாநகர்

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து காந்திமாநகர் பகுதியில் சரவணம் பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தள்ளுவண்டி கடை அருகே நின்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலளித்தனர்.

உடனே போலீசார் அந்த 2 பேரையும் சோதனை செய்தபோது, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள்,பீளமேடு புதூரை சேர்ந்த நிதீஷ்குமார் (வயது 22), திருச்செங்கோட்டை சேர்ந்த பூபதி (26) என்பதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர் களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story