தொழிலாளியை தாக்கிய 2 பேர் சிக்கினர்
ராமநாதபுரத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் சிக்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் தனபாலன் மகன் செந்தில்குமார் (வயது 42). தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சீதக்காதி தெருவை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (26), செம்பொன்குண்டு தெரு மகேந்திரவர்மன் மகன் பொன்வர்மன் (26) ஆகிய இருவரும் இந்த இடத்தில் ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளனர்.
மேலும், இருவரும் சேர்ந்து செந்தில்குமாரை தாக்கியதோடு அருகில் கிடந்த சேர்களை உடைத்து விட்டு மதுபாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றார்களாம்.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், பொன்வர்மன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story