மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேர் கைது


மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேர் கைது
x

மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் ஏ.டி.ஆர்.நகரில் வசிப்பவர் பழனிகுமார்( வயது36). இவர் ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் பழைய இரு சக்கர வாகனங்கள் வாங்கி, விற்கும் கடை வைத்துள்ளார். இவரிடம் சந்தன குமார் (25) என்பவர் ஒரு பழைய இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளார். இந்த வாகனம் தொடர்பாக பழனிகுமாருக்கும், சந்தனகுமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டு உள்ளது. இ்ந்தநிலையில் சந்தனகுமார், தனது நண்பர் மதன்குமாருடன் (20) சேர்ந்து பழனி குமார் வீட்டுக்கு சென்று கொலைமிரட்டல் விடுத்ததுடன், அவரின் கடையில் இருந்த 36 மோட்டார்சைக்கிள்களையும் தீ வைத்து கொளுத்தி விட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பழனிகுமார் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். இவர்களை பிடிக்க வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து சந்தனகுமார், மதன்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story