லாட்டரி விற்ற 2 பேர் கைது


லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி விற்ற 2 பேர் கைது

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் (வயது 31), உப்பு பாளையம் ரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சம்பத் (55) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

--------------


Next Story