மான் வேட்டைக்கு சென்ற 2 பேர் கைது


மான் வேட்டைக்கு சென்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டைக்கு சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதியில் மர்ம மனிதர்கள் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதோடு இறைச்சியை விற்பனை செய்தும் வருகிறார்கள். இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் நபர்களும் வாங்கி செல்கிறார்கள். எனவே விலங்குகளை வேட்டையாடும் மர்ம நபர்களை வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே எரையூர் கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்த அருள் ஜோசப்(வயது 31), டேவிட் செல்வராஜ்(40) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் நாட்டுத்துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story