½ கிலோ தங்கக்கட்டி மோசடி செய்த 2 பேர் கைது
½ கிலோ தங்கக்கட்டியை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
½ கிலோ தங்கக்கட்டியை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்க கட்டி மோசடி
கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக் (வயது 45). இவர் அங்கு தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காள மாநிலம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா (32) என்பவர் ஆர்டரின் பேரில் தங்க கட்டி வாங்கி சென்று தங்க நகை வடிவமைத்து தரும் பணி செய்து வந்தார்.
கோவையில் தங்கியிருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம் பர் மாதம் சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான ½ கிலோ தங்கக் கட்டி வாங்கி ஒரு வாரத்தில் கம்மல்கள் செய்து தருவதாக கூறி வாங்கி சென்றார். அதன்பிறகு தபஸ் சமந்தா, தங்க கட்டியு டன் சொந்த ஊருக்க தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
2 பேர் கைது
அப்போது கொரோனா காரணமாக அவரை தேடி பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுப்ரதா பாரிக் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அது குறித்து உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மைசூரில் பதுங்கி இருந்த தபஸ் சமந்தாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த அவருடைய அக்கா கணவர் சாமல் சமந்தா (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
நகை பட்டறை வைத்தனர்
அவர்களிடமிருந்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான 182 கிராம் தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டது. மீதமுள்ள நகைகள் மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தங்கக்கட்டி வாங்கி மோசடி செய்த தபஸ் சமந்தா, சாமல் சமந்தாவுடன் சேர்ந்து நகைப்பட்டறை வைத்து உள்ளார். பின்னர் அவர்கள் தங்க கட்டியை உருக்கி ஆபரணம் தயாரித்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.