தம்மம்பட்டி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற 2 பேர் கைது


தம்மம்பட்டி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

கெங்கவல்லி:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 42). இவர் கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர் ஆவார். தற்போது உடையார்பாளையத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருகிறார். தேவேந்திரன் கடந்த 2018-ம் ஆண்டு செந்தாரப்பட்டி தெற்கு அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது அந்த முகவரியை வைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றார். மேலும் அதனை வைத்து தனது மனைவி, மகன், மகளுக்கும் பாஸ்போர்ட் பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் தம்மம்பட்டி உடையார் பாளையத்தை சேர்ந்த காவலாளி வேலை செய்து வரும் ஜனாந்த் என்ற ஜெகன் (44) என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு நாகியம்பட்டி சோப்பு மண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் தம்மம்பட்டியில் உள்ள திருப்பதி செட்டியார் தெருவில் குடியேறினார். இவர் போலியான முகவரி கொடுத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி ேபாலீசார் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற தேவேந்திரன், ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story