வேப்பந்தட்டை அருகே கட்டப்பஞ்சாயத்து பேசிய 2 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


வேப்பந்தட்டை அருகே கட்டப்பஞ்சாயத்து பேசிய 2 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x

வேப்பந்தட்டை அருகே கட்டப்பஞ்சாயத்து பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

அபராதம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 60). இவருக்கு வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கண்ணுசாமி வீடு கட்டி பயன்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் மீதமுள்ள நிலத்தை ஊர் பயன்பாட்டுக்கு கொடுக்குமாறு பஞ்சாயத்தார்கள் கேட்டுள்ளனர். இதற்கு கண்ணுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாயத்தார்கள் பேசி கண்ணுசாமிக்கு அபராதம் விதித்ததாக தெரிகிறது.

2 பேர் கைது

இதனை ஏற்க மறுத்த கண்ணுசாமி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மலையாளப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (43), சுரேந்திரன் (41) உள்பட 5 பேர் மீது அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுரேஷ், சுரேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story