இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது


இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்தவர் மகிமைராஜ் (வயது 60). இவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் வீட்டில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசில் மகிமைராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் அந்த வழியாக சென்றது தெரிந்தது. அதனடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கார்த்திக் (26) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 2 போரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் மகிமைராஜூக்கும்,கார்த்திக்கும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story