மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி திருட்டு போவதாக வந்த புகாரின் பேரில் திருப்பத்துார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க தனிப் படை அமைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர் நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் மகன் பெருமாள் (வயது 30) என்பதும், திருப்பத்துார் அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும் இவர் திருடும் இருசக்கர வாகனத்தை புத்துக்கோயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வரும் வாணியம்பாடி வேப்பமர சாலையை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சரவணன் (26) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்று விடுவதும், அவர் அந்த வாகனங்களை தனித்தனியாக பிரித்து விற்று வந்ததும் தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

---

Image1 File Name : S__RAJESHKUMAR-16524361.jpg

---

Image2 File Name : S__RAJESHKUMAR-16524362.jpg

----

Reporter : S. RAJESHKUMAR Location : Vellore - KANTHILI


Next Story