வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

சமயநல்லூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பரவை, சத்தியமூர்த்தி நகர், சரவண நகர், ஏ.பி.ஐ.ஏ. காலனி, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி நடந்து வந்தது. இந்த வழிப்பறி திருடர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரல் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு ஆலோசனையின் படி சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு முனியாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் பரவை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பரவை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 28), மதுரை மூன்றுமாவடியை சேர்ந்த சக்திவேல் கணபதி (30) என்றும் சமயநல்லூர் பகுதியில் பல்வேறு வழிப்பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 6¼ பவுன் நகையை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story