ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார் பணியிடை நீக்கம்


ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
x

ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார், பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் கூடுதல் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.24¼ கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 போலீசார் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். அவர்கள் காஞ்சீபுரம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் ஆரோக்கிய அருண், அவரது சகோதரரான செங்கல்பட்டு மாவட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சகாயபாரத், மற்றொரு சகோதரரான காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் இருதயராஜ் உள்பட 8 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் போலீசாரான ஆரோக்கிய அருண் மற்றும் அவரது சகோதரர் சகாயபாரத் இருவரையும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் இருதயராஜ் முதல் தகவல் அறிக்கை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story