2 கடைகளில் திருட்டு; 5 பேர் கைது

தூத்துக்குடியில் 2 கடைகளில் திருடியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் கிழக்கு பகுதியில் ராஜமுருகன் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அதன் அருகே பலவேசம் என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கடையில் இருந்த தலா ரூ.2 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதபோல் மெடிக்கலில் இருந்த ஒரு செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 23), மற்றும் 19 வயது வாலிபர்கள் 2 பேர், 17 வயது வாலிபர்கள் 2 பேர் ஆக மொத்தம் 5 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் 5 பேரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






