குட்கா, பான்பராக் விற்பனை செய்த 2 கடைகளுக்கு 'சீல்'


குட்கா, பான்பராக் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
x

குட்கா, பான்பராக் விற்பனை செய்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா, பான்பராக், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின் பேரில், அவரது உத்தரவின் பேரில் வாணியம்பாடி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது கடையிலும், மில்லத் நகர் பகுதியில் முஜிப் என்பவரது கடையிலும் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் போலீசார் இணைந்து குட்கா, பான்பராக் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் கூறுகையில், வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட, வாணியம்பாடி நகரம், தாலுகா மற்றும் ஆலங்காயம் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டா கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.


Next Story