காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x

முசிறி அருகே துக்க காரியத்துக்கு வந்த இடத்தில் பெற்றோர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

திருச்சி

முசிறி,ஆக.28-

முசிறி அருகே துக்க காரியத்துக்கு வந்த இடத்தில் பெற்றோர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

மாணவர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விஷ்வா (வயது 13). 7-ம் வகுப்பு படித்து வந்தான். அதே கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் கோபால், கோபி ஆகியோர் மகன்களை அழைத்துக்கொண்டு உறவினரின் ஈமகாரிய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் மகன்களுடன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற விஷ்வா, ரித்தீஷ் ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கினர்.

சாவு

இதைக்கண்ட அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஈமகாரியத்தில் கலந்து கொண்டவர்கள் மாணவர்கள் இருவரையும் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க காரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 மாணவர்கள் பெற்றோர்களது கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story