கறம்பக்குடி அரசு பள்ளியில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கறம்பக்குடி அரசு பள்ளியில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x

கறம்பக்குடி அரசு பள்ளியில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த 7-ம் வகுப்பு படிக்கும் தாட்சாயினி (வயது 12), அனுசுயா (12) ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிகளை ஆசிரியர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 மாணவிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிகளை பரிசோதித்த டாக்டர் காலை உணவு சாப்பிடாததால் வெயிலில் நின்ற நிலையில் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து அந்த மாணவிகளை அவர்களது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.


Next Story