செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் முரளி (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் அப்பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்றார். அப்போது ஆட்டோவில் வைத்திருந்த செல்போனை 2 வாலிபர்கள் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து முரளி அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் செல்போனை திருடியதாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல தெருவை சேர்ந்த பாலமுருகன் (22), குலமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த வினோத் (21) ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story