2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி இளையான்வட்டம் பகுதியை சேர்ந்தவர் குண்டப்பன் (வயது 23). மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டையில் தங்கி வந்துள்ளார். இந்தநிலையில் அவர் மாட்டுக் கொட்டகையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (30) கூலி தொழிலாளி. இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுப்பற்றி அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.