குலசேகரத்தில் 2 காய்கறி கடைகளில் திருட்டு


குலசேகரத்தில் 2 காய்கறி கடைகளில் திருட்டு
x

குலசேகரத்தில் 2 காய்கறி கடைகளில் திருட்டு நடந்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகே சூரியகோட்டை சேர்ந்த ராஜா என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். அவர் நேற்று காலையில் கடையைத் திறக்க வந்த போது கடையின் இரும்பு சட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேஜையில் வைத்திருந்த ரூ.1,860-ஐ காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் இரும்பு சட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடியது தெரிய வந்தது. இதே போல் அருகில் உள்ள இன்னொரு காய்கறி கடையிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜா மட்டுமே குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story