சென்னை கோயம்பேட்டில் 2 ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கம்


சென்னை கோயம்பேட்டில் 2 ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கம்
x

சென்னை கோயம்பேடு சந்தையில் புயல் தாக்கத்தால் 2 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன.

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தையில் புயல் தாக்கத்தால் 2 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. மலிவு விலையில் விற்றும் வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக வருகின்றன.

இந்நிலையில் புயல் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு கடந்த இரண்டு நாட்களாக சில்லறை வியாபாரிகள் வரத்து குறைந்து, காய்கறி விற்பனையும் குறைந்தது. இதனால் சந்தையில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கின.

இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது,

இரு நாட்களில் சுமார் 2 ஆயிரம் டன் காய்கறிகள் விற்காமல் தேக்கம் அடைந்ததுள்ளன. மொத்த விலையில் பீன்ஸ், பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், நூக்கல், முள்ளங்கி தலா கிலோ ரூ.10, பீட்ரூட், தக்காளி போன்றவை தலா ரூ.15 என மலிவு விலையில் விற்றும் வாங்க ஆள் இல்லாத நிலை நீடித்தது".

இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ரூ. 12, முட்டிகோஸ் ரூ.8, கதரி ரூ. 10, சின்ன வெங்காயாம் ரூ. 40, பீன்ஸ் ரூ.8 க்கும் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story