முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் சடலமாக கண்டெடுப்பு


முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் சடலமாக கண்டெடுப்பு
x

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது குட்டிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, குட்டிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புலிக்குட்டிகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் புலி உயிருடன் உள்ளதா? அல்லது தாய் புலி உயிரிழந்ததால், குட்டிகளும் உயிரிழந்தனவா? என வனத்துறையினர் தாய் புலியை தேடி வருகின்றனர்.


Next Story