ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்...கோவை மாநகராட்சிக்கு மநீம கண்டனம்


ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்...கோவை மாநகராட்சிக்கு மநீம கண்டனம்
x

கோப்புப்படம் 

பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.

கோவை,

கோவையில் ஒரே அறையில் இருவர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டியதை மக்கள் நீதி மய்யம் கண்டித்துள்ளது. இந்த கழிப்பறையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி கேலிக்குள்ளாகியுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று விமர்சித்துள்ளது. இதனை அரசு வேடிக்கைப் பார்க்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது மட்டுமின்றி, அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மறுகட்டுமானத்துக்கான தொகையை அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதே, இனியும் இதுபோல நேராமல் தடுக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் எச்சரித்துள்ளது.

1 More update

Next Story