தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரமணன், மேற்பார்வையாளர் அசோகன் மற்றும் தூய்மை பரப்புரையாளர்கள் விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக் பைகள், டீ கப், உணவு சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் குச்சி, கொடி, ஐஸ்கிரீம் குச்சி உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 டன் எடையுள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஒரு மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.

1 More update

Next Story