மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது
திண்டிவனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது செய்தனா்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பெண்களின் பையை சோதனை செய்தனர். அப்போது பையில் 110 மதுபாட்டில்கள் மற்றும், 5 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 பெண்களிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் செஞ்சி தாலுகா மலையரசன்குப்பம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி சுமதி(வயது 38), அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பவானி(65) ஆகியோர் என்பதும், புதுச்சோியில் இருந்து பஸ்சில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமதி, பவானி ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story