கல்லூரி மாணவியிடம் ரூ.84 ஆயிரம் திருடிய 2 பெண்கள் கைது


கல்லூரி மாணவியிடம் ரூ.84 ஆயிரம் திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் ரூ.84 ஆயிரம் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் ரூ.84 ஆயிரம் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி

கோவை சிங்காநல்லூர் தேவேந்திர கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலைசெல்வி (வயது 24). இவர் கோவையில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தனது தாயாருடன் நேற்று முன்தினம் சிங்காநல்லூரில் இருந்து அரசு பஸ்சில் பாலசுந்தரம் ரோடு மகளிர் பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.

அங்கிருந்து அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ வில் சென்று இறங்கினர். பின்னர் அவர்கள், ஆட்டோவிற்கு பணம் கொடுப்பதற்காக பர்சை தேடினர். அப்போது பஸ்சில் கூட்டத்தை பயன்படுத்தி பர்சை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

பணம் திருட்டு

அந்த பர்சில் 2 ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.84 ஆயிரத்து 450 பணம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் மீண்டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கிருந்த 2 பெண்கள் தப்பி செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த பெண்கள், ஓடும் பஸ்சில் கலைசெல்வியின் மணிபர்சை திருடியதும், அவர்கள் கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த லட்சுமி (40), சித்ரா (30) என்பதும் தெரிய வந்தது.

2 பெண்கள் கைது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி, சித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.84,450 பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த 2 பெண்கள் மீதும் நகை திருடியதாக மேலும் பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது.


Next Story