கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல்:முன்னாள் காசாளருக்கு 2 ஆண்டு சிறை


கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல்:முன்னாள் காசாளருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் செய்த முன்னாள் காசாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த 1993-ல் இருந்து 1994-ம் ஆண்டில் காசாளராக பணிபுரிந்தவர் முருகேசன். அப்போது இவர் வங்கி பணம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 400-ஐ தன்னுடைய உறவினர்களான பாண்டி மற்றும் குருசாமி ஆகியோர் உதவியுடன் கையாடல் செய்ததாக சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 2-ல் நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நீதிபதி சத்யநாராயணா உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் பாண்டி, குருசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story