டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்


டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
x

விபத்தில் சிறுவன் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தர்மபுரி

விபத்தில் சிறுவன் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

விபத்தில் சிறுவன் பலி

தர்மபுரி மாவட்டம் நத்தள்ளி பகுதியை சேர்ந்த வாலிபர் அஜித்குமார் (வயது 17). இவர் கடந்த 2018- ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோகத்தூர் கூட்டு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் அஜித்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

2 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் -1 -ல் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டிய டிரைவர் சிவசங்கரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story