நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x

நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

சேலம்

நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர்சேலம் அருகே குப்பனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் வெளியே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த மாணவிகள் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு உணவு வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்தனர். இதையடுத்து வாலிபர்கள் மாணவிகளிடம் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் எங்களின் தோள்களில் கைகளை போட்டு எங்களை அழைத்து செல்லுங்கள் என்று கேலி, கிண்டல் செய்தனர்.

இதைகேட்ட மாணவிகள் வாலிபர்களிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து வாலிபர்கள் மாணவிகளிடம் தகராறு செய்ததுடன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் மாணவிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் நர்சிங் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து தாக்கியதாக குப்பனூர் கொட்டாயூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22), கார்த்திக்கேயன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story