ரெயிலில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது


ரெயிலில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Feb 2023 8:26 PM IST (Updated: 26 Feb 2023 8:32 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:-

திருச்சி துரைசாமிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் அந்தோணி ராஜ் (வயது 55). இவர் வாஸ்கோடாகாமா- வேளாங்கண்ணி ரெயிலில் எஸ்-7 பெட்டியில் பயணம் செய்தபோது இவருடைய விலை உயர்ந்த செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து அவர் சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலைய 1-வது நடைமேடையில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெங்களூரு பிரகாசம் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் குமரன் (வயது 26) என்பதும், இவர் ஜோசப் அந்தோணி ராஜின் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மீரன்கல்ட் பகுதியை சேர்ந்தவர் சைனீசன் (45). இவர் சென்னை- மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றபோது இவருடைய செல்போனை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து சேலம் ெரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை திருடிய குறிஞ்சிபாடி தாலுகா கல்லுக்குடி வேலுதம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் ( 22) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story