மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது


மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்களை போலீசாார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 61). இவரது நிலத்திலிருந்து மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் ஒலக்கூர் மெயின் ரோட்டில் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா முருக்கை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி(35), திண்டிவனம் தாலுகா கடவம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(20) என்பதும், சுப்பிரமணியின் மின் மோட்டாரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசாார் அவர்களிடம் இருந்த மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story