இரும்பு திருடிய 2 வாலிபர்கள் கைது


இரும்பு திருடிய 2 வாலிபர்கள் கைது
x

கோவையில் இரும்பு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (வயது 56). தனியார் நிறுவன மேலாளர். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது வழக்கம். மேலும் அங்கு பழைய இரும்பு பொருட்களை போட்டிருந்தார். இந்த நிலையில், அங்கு போடப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை காணவில்லை.

மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முத்துக்குமார் (22), சதாம் உசேன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story