கத்திமுனையில் தம்பதியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது


கத்திமுனையில் தம்பதியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கத்திமுனையில் தம்பதியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

கத்தியை காட்டி மிரட்டி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விரியூரை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் அந்தோணி ஜூலியட்(வயது 26). சம்பவத்தன்று இவர் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் என்னும் இடத்தில் வந்த போது திடீரென மழை பெய்ததால் கணவன், மனைவி இருவரும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் ஒதுங்கி நின்றனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அந்தோணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

வந்தவாசியில்

பின்னர் இதுகுறித்து அந்தோணி ஜூலியட் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தம்பதியிடம் நகை பறித்த மர்ம நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பதுங்கி இருப்பது தொிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் வந்தவாசிக்கு விரைந்து சென்று அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். 2 பேர் மட்டும் பிடிபட்டனர்.

2 வாலிபர்கள் கைது

பின்னர் அவர்களை திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வந்தவாசி சன்னதி தெருவை சேர்ந்த ரிஷிநாத்(வயது 20), சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார்(20) என்பதும், திருநாவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 பவுன் நகை, 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய இன்னொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story