தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

மாத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை

தொழிற்சாலை

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அருகே உள்ள லெட்சுமணன்பட்டியில் ஒரு தனியார் இரும்பு உருக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் பின்பக்க சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்த 2 வாலிபர்கள் அங்கிருந்த இரும்பு துண்டுகளை தொழிற்சாலை வளாகத்தில் உள்ளே இருந்து வெளியே தூக்கி போட்டுக்கொண்டிருந்தனர்.

இதைபார்த்த அந்த தொழிற்சாலை ஊழியர்கள் அவர்கள் 2 பேரையும்மடக்கி பிடித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரிய சூரியூரை சேர்ந்த சங்கிலிமுத்து மகன் பெரியய்யா (வயது 28), அதே ஊரை சேர்ந்த அய்யாவு மகன் முத்துவேல் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 கிலோ இரும்பு ராடுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story