செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம்


செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம்
x

பொது கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயா மரத்தூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 30), முத்து (30) ஆகிய 2 பேர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசாரும், ஓமலூர் தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அங்கு 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் அதனை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story