தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் கைது


தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் கைது
x

தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் பருத்தியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் அதிகாரிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, பருத்திக்கு உரிய விலை கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெருமளவில் ஏமாற்றப்பட்டு, வியாபாரிகள், இடைத்தரகர்கள் லாபமடைகின்றனர். எனவே தமிழக அரசு தலையிட்டு பருத்திக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்க சென்றனர். அப்போது விவசாயிகள் அனைவரும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, நுழைவு வாயிலின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story