பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்
செஞ்சி அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்தனர்.
செஞ்சி:
செஞ்சியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 11 மணிக்கு தனியார் பஸ் ஒன்று ரெட்டணை நோக்கி புறப்பட்டது. கல்லாங்குப்பத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மேல்சேவூர் கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ்(வயது 78), முனியம்மாள்(52), ரேவதி(40), அமிர்தவள்ளி(65), கம்மந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜாராம்(60), கணக்கன்குப்பம் தனபாக்கியம்(70), ஆண்டாள்(60), ரெட்டணை சரோஜா(70), கல்லாங்குப்பத்தை சேர்ந்த முத்துலட்சுமி(66), ராஜம், கலைச்செல்வி(33), இவரது மகள்கள் சத்யா(11), சபரிதி(8) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
தீவிர சிகிச்சை
இவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் முனியம்மாள், சரோஜா, முத்துலட்சுமி, ராஜம், தனபாக்கியம் ஆகிய 5 பேர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். .
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவுரி தழையை சாலையில் காய வைத்திருந்ததால் அதில் ஏற்றாமல் பஸ் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மேலும் இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.