வார விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்


வார விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்
x

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

செங்கல்பட்டு,

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,490 ஏக்கர் பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு நவீன வசதிகளுடன் இயற்கை சூழலில் விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வண்டலூருக்கு வந்து விலங்குகளை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக அளவில் வருகை தந்தனர். இன்று ஒரே நாளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வண்டலூருக்கு வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், வண்டலூர் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story