வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீர் சாவு


வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீர் சாவு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் 20 காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தது.

காட்டுப்பன்றிகள்

வால்பாறை நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவிலான காட்டுப் பன்றிகள் ஊருக்குள் நடமாடி வருகிறது. இதனால் வேலைக்கு சென்று வரக்கூடிய பொது மக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதியில் கக்கன்கலனி, எம்ஜிஆர் நகர், வாழைத் தோட்டம் ஆகிய இடங்களில் நடமாடி வந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் கடந்த 2 நாட்களில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதுகுறித்து அறிந்ததும் வால்பாறை வனத்துறையினர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் இறந்து கிடந்த காட்டுப் பன்றிகளின் உடலை எடுத்து புதைத்தனர்.

காலசூழ்நிலை மாற்றத்தால்...

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வால்பாறை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் கனமழை பெய்து வருகிறது. காலசூழ்நிலை மாற்றம் காரணமாக காட்டு பன்றிகள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் காட்டுப்பன்றிகள் ஆங்காங்கே விழுந்து இறந்து கிடப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டுபன்றிகளுக்கு ஏதாவது தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறதா, இதன் மூலம் பொது மக்களுக்கு ஏதாவது தொற்று நோய்கள் பரவிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத் துறையின் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இறந்து கிடக்கும் காட்டுப்பன்றிகள் உடலை கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து உடல் பாகங்களை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி காரணத்தை கண்டறிய வேண்டும் என்றனர்.


Next Story