வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x
திருப்பூர்


மூலனூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

பள்ளி மாணவி

திருப்பூர் மாவட்டம் மூலனூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பூபதி (வயது 23). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கடந்த 11-6-2020 அன்று வெளியூர் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

சிறுமியின் பெற்றோர் முதலில் தங்கள் மகளை காணவில்லை என்று மூலனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் பூபதி, சிறுமியை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

20 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூபதிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை உரிய முறையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்த மூலனூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பாராட்டினார்.

1 More update

Next Story