சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்


சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகின்றது.

பவுர்ணமியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவதால் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில் இருந்து நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலைக்கு சென்னை, பெங்களூரு, சேலம் மார்க்கமாக கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story