பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்


பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

பூலித்தேவன் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில், ஆங்கிலேயர்களை முதன்முதலில் எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந் தேதி அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1-ந் தேதி பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவனின் முழு உருவ வெண்கல சிலைக்கு அவரது வாரிசு கோமதி முத்துராணி துரைச்சி மற்றும் தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் மரியாதை செலுத்தப்படுகிறது.

2,000 போலீசார்

இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 15-க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.





Next Story