பொம்மிடியில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 2 ஆயிரம் தபால் அட்டைகள் மத்திய மந்திரிக்கு அனுப்பிவைப்பு


பொம்மிடியில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 2 ஆயிரம் தபால் அட்டைகள் மத்திய மந்திரிக்கு அனுப்பிவைப்பு
x

பொம்மிடியில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 2 ஆயிரம் தபால் அட்டைகள் மத்திய மந்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரெயில் நிலையம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மைய பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் கோவை, சேலம், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்ல அதிகளவில் ரெயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

பொம்மிடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பொம்மிடியில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொம்மிடி பகுதி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மத்திய ரெயில்வே மந்திரிக்கு 2 ஆயிரம் தபால் அட்டைகள் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பினர்.

தென்னக ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், பொம்மிடி ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன், அனைத்து வணிகர் சங்கதலைவர் ஆசாம்கான், பொம்மிடி மக்கள் நலக்குழு தலைவர் முனிரத்தினம், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story