இந்திய ராணுவம் எத்தகைய சூழலையும் சமாளிக்க கூடியவை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
இந்திய ராணுவம் எத்தகைய சூழலையும் சமாளிக்க கூடியவை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை விழாவில் பேசினார்.
சென்னை,
தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி . ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். முன்னதாக, தாம்பரம் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது;-
*இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது
*தொழில்நுட்ப அடிப்படையில் நமது படைகள் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளன.
*தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது.
*நாட்டை காப்பதுடன் இயற்கை பேரழிவுகளின் போதும் ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது.,
*தமிழகம், உத்தரகாண்ட் இயற்கை பேரழிவுகளை ராணுவம் சிறப்பாக கையாண்டது.
*பதன் கோட் விமான படைத்தளத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டது.
*பதன்கோட் தளம் தாக்கப்பட்டது நமது வீரர்களின் போர்க்குணம் வியப்புக்குரியது.
இந்திய ராணுவ படைகளை எத்தகைய சூழலையும் சமாளிக்க கூடியது.
*இந்திய விமானப்படையின் திறன் இப்போது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
*பயங்கரவாத ஊடுருவல்களை முறியடிப்பதில் ராணுவம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
*ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தாம்பரம் விமானப்படைதளம்தான் முதுகெலும்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story